Tuesday, November 17, 2015

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய

உலகின் ஒரே சிறந்த கேள்வி
“நான் யார்?”
உலகின் ஒரே சிறந்த பதில்
“நான் யாருமில்லை!”

நான் யாருமில்லை என்றானதினால்
நானே எல்லாமும் ஆகினேன்

நான் யாருமில்லை என்பதற்கும்
நானே எல்லாமும் என்பதற்கும்
இடையில்
ஞானத்தின் மீது கட்டிய
பாலமாக உள்ளான்
குரு ரமணன்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய

Saturday, August 1, 2015

கனவு

வாழ்வில் கனவு
வாழ்க்கைக் கனவு
வாழ்வே கனவு

- ஸ்ரீ சக்திப்ரியன்

Wednesday, May 13, 2015

பூரணம்

தேடினேன் தொலைந்து போன
என்னை எங்கெங்கும்
காணேன் திகைத்தேன்
நாடினேன் இறைவனை
நழுவினான்
ஓடினேன் குருவிடம்
ஓடினார் எனைவிட்டு
களைத்து ஓய்ந்து
இருந்தேன்
இருப்பதையெல்லாம்
தொலைப்பாயென
அசரீரி கூறியது

பற்றாய் கிடந்த
பாவ புண்ணியமெல்லாம்
அற்றுப் போக அத்தனையும்
தொலத்தேன்
ஆச்சரியம்! ஆச்சரியம்! ஆச்சரியம்!

தேடின, தேவன்
ஓடின குரு அத்தனையும்
நான்! நான்! நான்!

சேர்த்ததோ சேர்ந்ததோ ஏதுமில்லை
தொலைத்ததோ தொலைந்ததோ ஏதுமில்லை

முழுமையே எங்கெங்கும்

-ஸ்ரீ சக்திப்ரியன்

Tuesday, April 7, 2015

தேடல்

தேடினேன் கிடைத்தது
தேடினேன் கிடைக்கவில்லை
கிட்டியதற்கும் கிட்டாததற்கும்
இடைவெளி ஏதுமில்லை
இரண்டும் என்னுள்ளேயே
பூ பார்க்க தலை மறைந்து
தலைப் பார்க்க பூ மறைவது போல்
புரிந்தது
தேடலின் முடிவு
கனவில் தோன்றும் நிஜம்
நிஜத்தில் தோன்றும் கனவு

- ஸ்ரீ சக்திப்ரியன்

Friday, March 27, 2015

ராம நாம மகிமை


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே!




ராம:                   ராம நாமம்
ராமேதி:                ராம + இத் = ராமனால்
ரமே:                   வசீகரிப்பது
ராமே:                  ராமனில்
மனோரமே:             மனதை வசீகரிப்பது
ஸஹஸ்ரநாமம்:        விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள்
தத்துல்யம்:             சமானமானது
ராம நாம வராணனே:   உயரந்த ராம நாமமே

ராமனால் ராமனில் வசீகரிப்பது ராம நாமமே
இந்த ராம நாமமே விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு சமானமானது.