Thursday, February 4, 2010

திருப்புகழ்

முருகப் பெருமானையும் அவனுடைய துணைவியர்களான தெய்வயானை, வள்ளி, அவன் திருவடி, அவனுக்கு சேவகம் செய்யும் மயில், சேவல், அவன் ஆயுதமான வேல் மற்றும் அவன் அணியும் மலர் மாலைகளான கடம்பு, வெட்சி என்று இவை எல்லாமும் ஓரே பாடலில் வரும்படி திருப்புகழில் திரு அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

அரிசன வாடைச் சேர்வைகு ளித்துப்
பலவித கோலச் சேலையு டுத்திட்
டலர்குழ லோதிக் கோதிமு டித்துச் சுருளோடே
அமர்பொரு காதுக் கோலை திருத்தித்
திருநுதல் நீவிப் பாளித பொட்டிட்
டகில்புழு காரச் சேறுத னத்திட் டலர்வேளின்
சுரத விநோதப் பார்வைமை யிட்டுத்
தருணக லாரத் தோடைத ரித்துத்
தொழிலிடு தோளுக் கேறவ ரித்திட் டிளைஞோர்மார்
துறவினர் சோரச் சோரந கைத்துப்
பொருள்கவர் மாதர்க் காசைய ளித்தற்
றுயரற வேபொற் பாதம் எனக்குத் தருவாயே
கிரியலை வாரிச் சூரரி ரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளிக ளிக்கக்
கிரணவை வேல்புத் தேளிர்பி ழைக்கத் தொடுவோனே
கெருவித கோலப் பாரத னத்துக்
குறமகள் பாதச் சேகர சொர்க்கக்
கிளிதெய்வ யானைக் கேபுய வெற்பைத் தருவோனே
பரிமள நீபத் தாரொடு வெட்சித்
தொடைபுனை சேவற் கேதன துத்திப்
பணியகல் பீடத் தோகைம யிற்பொற் பரியோனே
பனிமல ரோடைச் சேலுக ளித்துக்
ககனம ளாவிப் போய்வரு வெற்றிப்
பழநியில் வாழ்பொற் கோமள சத்திப் பெருமாளே

இப்பாடலுக்கு மட்டுமல்ல திருப்புகழின் அனைத்துப் பாடல்களும் அதற்கு விளக்கவுரையும் வேண்டுவோர் கீழ்காணும் வலைத்தள முகவரிக்கு செல்லவும். பலப் பாடல்கள் ஓதுவார்களைக் கொண்டும், முருகப் பக்தர்களைக் கொண்டும், பெரியோர்களைக் கொண்டும் பாடப்பட்டு அதை MP3 வடிவிலும் இணைத்திருக்கிறார்கள்.

தமிழர்கள், முருக பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக ‘தரிசிக்க’ வேண்டியத் தளம் இது.

http://www.kaumaram.com/