நீ
சுவைக்கிறாய்
எனக்கு
இனிக்கிறது
உன்
தேடலில்
என்
இலக்கு
உன்
பொக்கிஷம்
என்
பெட்டகத்தில்
முத்துக்குளியல்
அல்ல
முத்தால்
குளியல்
நிறம்
மாறும் தருணம்
மூடிய
கண்களுக்குள் பலவண்ணம் தெரியும்
தொடங்குவதற்காக முடிப்போம்
முடிவதற்காக தொடங்குவோம்
-ஸ்ரீசக்திப்ரியன்
No comments:
Post a Comment