Tuesday, September 30, 2014

நாணம்

எல்லா தடைகளையும்
கடந்து வந்துவிடுவேன்
உன்னையடைய

என்னை தாண்டித்தான்
வர இயலவில்லை

- ஸ்ரீ சக்திப்ரியன்

Monday, June 16, 2014

அறியும் அறிவு

என்னை நானறிந்ததை
யான் மட்டுமே அறிவேன்
பின்னை எடுத்துரைக்க எதிரே
அன்னியம் யாருமில்லையே!

- ஸ்ரீ சக்திப்ரியன்

Sunday, April 27, 2014

தாகம்

அந்தரங்கமோ
ஆன்மிகமோ
சொந்த அனுபவமே
சுகம்

நீர்!
நீர் குடித்தால்
என் தாகம்
தீராது

-ஸ்ரீ சக்திப்ரியன்

Sunday, March 9, 2014

சுவை

நீ சுவைக்கிறாய்
எனக்கு இனிக்கிறது

உன் தேடலில்
என் இலக்கு

உன் பொக்கிஷம்
என் பெட்டகத்தில்

முத்துக்குளியல் அல்ல
முத்தால் குளியல்

நிறம் மாறும் தருணம்
மூடிய கண்களுக்குள் பலவண்ணம் தெரியும் 

தொடங்குவதற்காக முடிப்போம்
முடிவதற்காக தொடங்குவோம்


-ஸ்ரீசக்திப்ரியன்

Saturday, January 18, 2014

தவறு

அந்தத் தவறை
யாருக்கும் தெரியாமல்தான்
செய்தேன்

ஆனால்

தெரிந்துவிட்டது
எனக்கு

-ஸ்ரீ சக்திப்ரியன்

துறவு

இருக்கும்போதே உலகை
துறக்கக் கற்றுக்கொள்

இல்லையென்றாலும்
உலகம் உன்னைத்
துறக்கத்தான் போகிறது

-ஸ்ரீ சக்திப்ரியன்

ஓம்

நீ
நான்
நாம்
ஆம்
ஓம்

-ஸ்ரீ சக்திப்ரியன்

உண்மை-காதல்

நேற்று அவளை
இன்று உன்னை
நாளை எவளையோ
உண்மையாக
காதலி...த்தேன்...க்கிறேன்...ப்பேன்
காதல்
காதலில்
உண்மை இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்

உண்மையாய் காதலிக்கத்
தெரிந்த எனக்கு
உண்மையை காதலிக்கத்
தெரியவில்லை

-ஸ்ரீ சக்திப்ரியன்