துன்பம்
வந்த போது
இதுவும்
கடந்து போகுமென எண்ணினேன்.
விளைந்த
பக்குவத்தால்
இன்பம்
வந்த போதும்
இதுவும்
கடந்து போகுமென எண்ணினேன்.
கடந்து
போனதெல்லாம்
மறைந்து
போகவில்லை – அதன்
பாதச்சுவட்டை
ஆழப்
பதித்துவிட்டே
போயுள்ளது.
இருப்பிற்கும்
இறப்பிற்கும்
முன்னும்
பின்னும்
கடக்க
காத்திருப்பவைகள் என்னவோ?
கடப்பது
நில்லாது
காண்பதும்
நில்லாது
கடப்பதை
காணுபவன் எவனோ
அவனைக்
கண்டுவிட்டால்
கடப்பதற்கு
ஏதுமில்லை
காண்பதற்கும்
ஏதுமில்லை
-
ஸ்ரீசக்திப்ரியன்
No comments:
Post a Comment